Wednesday 5 June 2013

+2 உடனடித் தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்க இன்றும் நாளையும் காலக்கெடு


http://dge2.tn.nic.in/hsctatkal/welcome.htm

HSS தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடித் தேர்விற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள்..

இன்றும் நாளையும் 06-06-2013 மற்றும் 07-06-2013 ஆகிய இரு தினங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணத்துடன் ஆயிரம் ருபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த படிவம் மற்றும் கட்டணத்தினை

http://dge2.tn.nic.in/hsctatkal/HSE%20JUNE%20JULY%202013%20THAKKAL%20INSTRUCTIONS.pdf

இதில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட இடங்களில் நேராக அளிக்க வேண்டும்


SSLC உடனடித் தேர்விற்கான காலக்கெடு அரை நாட்கள் நீடிப்பு

http://dge2.tn.nic.in/sslcprivate/

இன்று மதியம் 1 மணி வரை SSLC உடனடித் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.   

Tuesday 4 June 2013

SSLC உடனடி தேர்விற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்.



மே 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட SSLC தேர்வில் தவறிய மாணவர்கள் உடனடியாக மறுத் தேர்வினை எழுத ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலம் இன்றுடன் முடிவடைகிறது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Monday 3 June 2013

இனி அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்!

மே 28 - GO No 145 இன் படி...

தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும்
அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.

தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.